யாழிலிருந்து ஆரம்பமாகவுள்ள கதிர்காம பாதயாத்திரை

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு இலங்கையின் மிகநீண்ட கதிர்காமப் பாதயாத்திரை நாளை காலை யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து வேல்சாமி தலைமையில் ஆரம்பமாகின்றது.

இந்த பாதயாத்திரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் அமைகிறது.

52 நாட்கள், 572 கிலோமீற்றர் தூரம் கொண்ட இலங்கையின் மிக நீண்ட கதிர்காம பாதயாத்திரையானது யாழ். செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து விசேட பூஜை புனஸ்காரங்களுடன் ஆரம்பமாக உள்ளது.

இந்த நிலையில், பாதயாத்திரை செல்லவுள்ள குழுவினர் காரைதீவு நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து வெள்ளி வேல் எடுக்கும் நிகழ்வுடன் சம்பிரதாயபூர்வமாக விசேட பூசை வழிபாடுகளுடன் கடந்த 29ஆம் திகதி வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here