வடமாகாண பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடத்திற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்கான நியமனம், ஜூன் 06 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடத்திற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்காக, கடந்த 25 26ம் திகதிகளில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில் தகுதியடைந்த பட்டதாரிகளிற்கான நியமனம் எதிர்வரும் ஜூன் 06 ஆம் திகதி வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

குறித்த பாடங்களிற்கு வடக்கு மாகாணத்தில் 450 வெற்றிடங்கள் உள்ளபோதிலும் 352 பட்டதாரிகளே விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரையும் அழைத்திருந்தோம். இவர்களில்ல 321 பட்டதாரிகள் மட்டுமே நேர்முகத் தேர்விற்குத் தோற்றியிருந்தனர்.

இவ்வாறு தோற்றியிருந்த பட்டதாரிகளில் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவருமே தகுதியுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இவ்வாறு தகுதியெனக் கண்டறியப்பட்ட பட்டதாரிகளில் ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், அப்பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழைப் பெற்றுச் சமர்ப்பிக்கவில்லை. அவர்களிற்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சான்றிதழை இன்றும் (02) நாளையும் (03) சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டதும் குறித்த தேர்முகத் தேர்வில் தோற்றி தகுதியெனக் கண்டறியப்பட்ட அனைவருககும் நியமனம் வழங்கப்படவுள்ளது.

அவ்வாறு வழங்கப்படும் நியமனத்தினை எதிர் வரும் ஜுன் 06 ஆம் திகதி வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான தனியான அழைப்புக் கடிதங்கள் குறித்த பட்டதாரிகளிற்கு அனுப்பி வைக்கப்படும். என்றார்

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here