இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் – 300 பேர் பலி

இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 300 பேர் வரையில் இறந்துள்ளதாக பிரதி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 பேரை கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரையில் 208ஆக அதிகரித்திருந்தன.

இந்தநிலையில் காணாமல் போன 92 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த பல வருடங்களின் பின்னர் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் இதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த அனர்த்தம் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here