இலங்கையில் மிக முக்கிய மலை சரியும் அபாயம்

உலகின் மிகப்பழைமை வாய்ந்த எழும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்ட பாஹியன்கல மலைக்குகை மண்சரிவு ஏற்பட்டு சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கையின் வரலாற்று ஆய்வாளர்கள் புவிச்சரிதவியல் மற்றும் கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் அவசர தொடர் ஆய்வுகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வாரம் நாட்டின் பல இடங்களிலும் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் மற்றும் இந்த மலைக்குகையை அடுத்துள்ள மலைப் பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளின் போது பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடல் மட்டத்திலிருந்து 1010 அடி உயரத்திலுள்ள இம்மலைக்குகையும் அண்மித்த மேட்டு நிலப்பகுதிகளும் மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்நிலைமையையடுத்து பாஹியன்கல மலைக்குகை பெளத்த விகாரையில் தங்கியிருந்த 30 பிக்குகள் உட்பட அருகாமையில் வசித்து வந்த 21 குடும்பங்களும் அவ்விடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர்.

இந்நிலைமையை அடுத்து இப்பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் பிரபல தொல்பொருள் வரலாற்றாசிரியர்கள், கட்டட ஆராய்ச்சிகள் நிறுவனம், புவிச்சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றின் நிர்வாகதுறைசார் அதிகாரிகள் இடத்தை பாதுகாப்பது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here