இலங்கையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு

இலங்கையில் வீடுகளுக்கு குழாய் வழியாக சமையல் எரிவாயு விநியோக திட்டத்தை முன்னெடுக்க இந்தியாவை சேர்ந்த பெட்ரோநெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பெட்ரோநெட் நிறுவனம் சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் றிசார்ட் பதியூதீன் மற்றும் பெட்ரோநெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மணிக் ஜாப்போ ஆகியோர் இந்த திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டப்பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here