என்னைக் கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை!– கீத் நொயார்

தம்மைக் கடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை என ஊடகவியலாளர் கீத் நொயார் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் நொயார் இதனைக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கூறியுள்ளதாவது…

என்னைக் கடத்தியவர்களை பொலிஸார் இதுவரையில் கைது செய்யவில்லை.சரியான நபர்களை கைது செய்தால் சொந்த செலவில் வந்து அவர்களை அடையாளம் காட்டுவேன்.

பொலிஸாரின் விசாரணைகளுக்கு பூரண அளவில் ஆதரவளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நொயார் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியினையும் கருத்திற் கொள்ளுமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here