குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் கைது செய்யப்படுவர்

குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும், தகுதிகள் பாராது அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வட.மாகாண மக்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் இன்று (சனிக்கிழமை) காலை கையளிக்கப்பட்டன. இதன்போது ஞானசார தேரர் குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். இதனடிப்படையில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எம்மால் எடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக எமது விசேட விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை விரைவாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளோம்.

நாம் அரசியலிற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதுடன் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருப்பினும் நாம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். இதனடிப்படையில் ஞானசார தேரர் விரைவில் கைது செய்யப்படுவார்” என பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here