சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்றவர்கள் கைது

மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த எட்டு உழவு இயந்திரங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் சாரதிகள் எட்டுப்பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.ஏ. வாஹிட் தெரிவித்துள்ளார்.

களுமுந்தன்வெளி ஆற்றங்கரையில் பதுங்கியிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்களைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆற்றங்கரையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இவர்களிடம் காணப்படுகின்ற போதிலும் இவர்கள் மீது விதிமுறைகளை மீறி ஆற்றில் மணல் எடுத்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையினால் ஆற்றில் பாரிய குழிகள் ஏற்படுவதாகவும் மாரி மழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்க வாய்ப்பு உண்டாவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கரடியனாறு பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும் வேறுபட்ட உபாயங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here