சம்பூரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!

திருகோணமலை, சம்பூரில் சட்டவிரோதமான முறையில் டைனமைட் வெடிபொருட்கள் மூலம் மீன் பிடிக்க முற்பட்ட நான்கு பேரை இன்று (சனிக்கிழமை) சம்பூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.கூனித்தீவு, மூதூர் மற்றும் தாயிப்நகரைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடம் இருந்து படகு, அதற்குரிய இயந்திரம், 28 டைனமைட் குச்சிகள், 7 அடி டைனமைட் நூல், டெட்டனேட்டர்-9, சிலிண்டர்கள்-4 மற்றும் சவல் போன்ற பொருட்களையும் சம்பூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here