சிறையில் இருந்து இலங்கையர் தப்பியோட்டம்! தமிழகத்தில் சம்பவம்!

தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, அழியாநிலை பகுதியில், இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.

இந்த முகாமில் வசித்து வந்த சுரேஷ்குமார், (வயது 25) என்ற இளைஞன், 10 வயது சிறுமி ஒருத்தியை கடந்த ஆண்டு, அக்டோபரில், பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

நேற்று வெள்ளிக்கிழமை, மதிய உணவுக்காக, சிறையில் இருந்த கைதிகள் திறந்து விடப்பட்டனர். முதல் ஆளாக, சுரேஷ்குமார் உணவு வாங்கி சாப்பிட்டான்.

பின், கூட்டத்தில் இருந்து நழுவி, தன் கைலியை கிழித்து, கயிறு போல கட்டி, 20 அடி உயர மதில் சுவரின் மேல் உள்ள கல்லில் மாட்டி, அதன் மூலம் ஏறி குதித்து தப்பி விட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here