சுவிஸ் தூதுவர்: வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் ஹெயின்ஸ் வோல்கர் நெதர்கோன், புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.

புதிய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள ரவி கருணாநாயக்கவுக்கு சுவிஸர்லாந்து தூதுவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here