ஞானாசார தேரரை கைது செய்ய 4 பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையாம்!

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானாசார தேரரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்தப் பணிகளின்போது, பேதங்களின்றி செயற்படுவதாகவும் கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஞானாசார தேரர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்ட இடத்திலும் (வைத்தியசாலையிலும்) சில பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தியுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here