நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்ட பேரிழப்புகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

ஜூன் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன. அவ்வாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் 5ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.

இதன்போது பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்குரிய நாள் தீர்மானிக்கப்படும். இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ளது.

நாட்டில் தென்மேற்குப் பிராந்தியங்களில் பெய்துவரும் கனமழையால் வெள்ளிக்கிழமை மாலை வரை 208 பேர் பலியாகியுள்ளனர். 92 பேர் காணாமல்போயுள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளனர்.

9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும், ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட வீடுகள் முழு அளவிலும் சேதமடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here