நிவாரண பொருட்களுக்கு பதிலாக நிதியுதவி கோரும் அரசாங்கம்

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகள் வழங்கும் பொருள் உதவிக்கு பதிலாக 800 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவிகளை வழங்குமாறு அரசாங்கம் அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வீடுகளை நிர்மாணிக்க வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கு 25 லட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் கிராம சேவகர் மட்டத்தில் தற்போது திரட்டப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும் பணம் வழங்கப்பட்டாலும் மண்சரிவு ஏற்படக் கூடிய ஆபத்துள்ள இடங்களில் மீண்டும் வீடுகளை நிர்மாணிக்க அனுமதிக்க போவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முழுமையாக மற்றும் பாதியளவு சேதமடைந்த வீடுகள் என தரம் பிரிக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here