பல வருடங்களாக திருத்தப்படாத நிலையில் உள்ள வீதி

வடமராட்சிக் கிழக்கு தாளையடியிலிருந்து சுண்டிக்குளம் வரையான வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான மாகாண சபை வீதி பல வருடங்களாக திருத்தப்படாத நிலையில் உள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக அந்த வீதியின் நடுவில் வாகனங்கள் புதைந்து மிகச் சிரமத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

சுமார் பதினைந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய பாதையில் நாற்பத்தைந்து நிமிடங்கள் செல்கின்ற போதும் ஓரளவேனும் பாதுகாப்பாகக் பயணிக்க முடியாதுள்ளது.

மாகாண சபை நிதி செலவு செய்யப்படாது வருடாந்தம் திரும்பி செல்லும் நிலையில் இந்த வீதி கவனிப்பாரற்று காணப்படுகிறது என அந்த மக்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை சாலையிலிருந்து செல்கின்ற பேருந்துகள் கேவில் வரை செல்லாமல் கட்டைக்காடு சந்தியுடன் திரும்பி விடுகின்றன.

இதனால் பயணிகள், பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றதுடன் கேவில் மக்களுக்கும் பேருந்து நடத்துனர் சாரதிகளுக்கு இடையே முறுகல் நிலை தொடர்ந்தும் ஏற்படுவதாக தெரிவிக்கபடுகிறது.

மேலும், இது தொடர்பில் சாலை முகாமையாளர் பிரதேச செயலர் ஆகியோர்களுக்கு பல தடவைகள் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை எனவும் அந்த வழித்தடம் பருத்தித்துறை கேவில் என்பதும் இங்கு குறிப்பிடப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here