புதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த வருடம் கொண்டு வரப்படும்: கிரியெல்ல

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்பதே கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதி என்பதால், அதனை இந்த வருடம் நிறைவேற்ற உள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான வேலை தற்போது நடந்து வருகிறது எனவும் சில விடயங்கள் தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதால் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு கட்சியின் தேவையல்ல, அது முழு நாட்டின் தேவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முன்னர் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ளதாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here