போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

இடிதாங்கி, ஐந்தரை லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை களவாடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் எதிர்வரும் 7 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொரள்ளை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி என தெரியவந்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பர்ணான்டோவுக்கு சொந்தமான பொருட்களை அவரது பணியாளர்கள் இருவர் கொழும்புக்கு எடுத்து சென்ற போதே இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும், பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை சோதனை இட்ட போது இந்த கொள்ளை சம்பவத்தில் 8 பொலிஸ் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here