மட்டக்களப்பில் மாவட்ட இளைஞர்களின் ஒன்றிணைவில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருகோணமலை, மல்லைகைத்தீவில் மூன்று சிறுமியர்கள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படமையை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடத்தியிருந்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டதுடன் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

இதன்போது சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமானால் கடுமையான சட்டம் அமுல்படுத்தவேண்டும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் நீதிமன்றங்கள் கடுமையான நடைமுறைகளை பின்பற்றவேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here