மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்

இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குருநாதன் கோரியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கையின் கொள்கை மற்றும் சட்டமீளமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவிவருகிறது.

எனினும் அரசாங்கத்தின் மதிப்பளிக்கும் தன்மையை காணமுடியவில்லை. இந்த விடயங்களில் அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது அம்பிகா சற்குருநாதன் இந்த குறைகளை வெளியிட்டார்.

அரசாங்கத்தை பொறுத்தவரை, சர்வதேசத்தின்பால் உள்ள கடமைகளை நிறைவேற்றவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கலாசார மறுப்பு, வீடுகளில் வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

எனினும் அரசாங்கத்தின் எதிர் செயற்பாடுகள் குறைவாகவே உள்ளன. குறிப்பாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 414 சிறுவர் தொடர்பான நிறுவனங்களில் வசிக்கும் 14,175 சிறுவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்வதாக அம்பிகா சற்குருநாதன் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here