மைத்திரி – மகிந்த நேருக்கு நேர் சந்திப்பு: இரு தரப்பும் பேச்சுவார்த்தையில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரை நேரடியான பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் சில முறை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்ததுடன் பின்னர் தமது தரப்பு பிரதானிகளை சந்தித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு முன்னர் சகல பிரச்சினைகளையும் தீர்த்து கொண்டு இணைந்து போட்டியிட்டால் பாரிய வெற்றியை பெற முடியும் என இரண்டு தரப்பினரும் நம்புவதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியப்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு உலகில் பலமிக்க நாடொன்று மகிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாகவே இரு தரப்பும் தற்போது இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here