யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மின்சாரத் தடை

இலங்கையின் வட மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இந்த மின் விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழில் நுணாவில், கைதடி, நாவற்குழி, பருத்தித்துறை நகரம், கைதடி வடமாகாண சபை அலுவலகம், தோப்பு, அச்சுவேலி, பலாலி தெற்கு, ஆவரங்கால், கைத்தொழிற்பேட்டை போன்ற இடங்களில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், வவுனியா மாவட்டத்தில் குருமன்காடு, வைரவபுளியங்குளம், உள்ளிட்ட சில பகுதிகளிலும், மன்னாரில் முருங்கன்பிட்டி, மாவிலங்கேணி, நானாட்டான் மற்றும் நொச்சிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின் விநியோகத் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவே இந்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here