வவுனியாவில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து

வவுனியாவில் இன்று முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் படுகாயமடைந்த நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

லக்சபான வீதியிலிருந்து வவுனியா புகையிரத நிலையம் நோக்கி நால்வரை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக முச்சக்கரவண்டியின் சாரதி தெரிவிக்கையில், லக்சபான வீதியிலிருந்து புகையிரத நிலையம் நோக்கி பயணித்தேன்.

கடும் காற்று வீசியதால் முச்சக்கரவண்டி எனது கட்டுப்பாட்டை இழந்து குளக்கட்டில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என கூறியுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here