வவுனியா சிறைச்சாலை கைதி மரணம்

வவுனியா சிறைச்சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையில் இருந்த சிறைக்கைதி ஒருவர் திடீர் சுகயீன காரணமாக வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

அத்துடன், கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவர் கடந்த புதன் கிழமை வவுனியா சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here