அரசாங்கம் அதிரடி : சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் எச்சரிக்கை

இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை கைது செய்ய அரசாங்கத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை  (INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS (ICCPR) ACT, No. 56 0F 2007)  Article 3. (1) No person shall propagate war or advocate national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence.

அமுல்படுத்துமாறு, நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

இதனடிப்படையில் இனவாத, மதவாத கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனடியாக கைது  செய்யப்படுவதோடு அப்பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளே இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் மூன்றாம் சரத்தின் பிரகாரம், எந்தவொரு நபரும் பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுதலாக அமைந்த தேசிய, இன, அல்லது மத வெறுப்பை ஊக்குவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here