இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்தியது இலங்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்பதை இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் தமது எல்லைக்குள் பிரவேசிக்கும் படகுகளை தமது கடற்படையினர் கைப்பற்றுவர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் ஏனைய படகுகளையும் விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 143 இந்திய மீனவ படகுகள், தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here