இயற்கையின் கோரம் : தீவிரமடைந்துள்ள டெங்கு நோய்த் தாக்கம்!

நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளார்களே நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான  முதல் 6 மாத  காலப்பகுதியில் 56 ஆயிரத்து 887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதத்தில் 12 ஆயிரத்து  212 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு கடந்த மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நோய் தாக்கம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டில் 12 ஆயிரத்து 610 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதத்தில் 2 ஆயிரத்து 994 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர். ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பில் கடந்த மே மாதத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42.55  வீதத்தினால் அதிகரித்துள்ளதை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல்களில் அறியக்கூடியதாக உள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here