இலங்கையில் அமெரிக்க இராணுவம்!

வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் அமெரிக்கப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இயற்கையின் தென் மாகாணம் உட்பட 12 மாவட்டங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன், மண் சரிவினால் பலர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதுவரை 224 உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏழு லட்சம் பேர்வை இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சர்வதேச நாடுகள் அனைத்தும் இந்த அனர்த்தத்தில் இருந்து மீள்வதற்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலிய என்று பல்வேறு நாடுகள் தங்கள் அவசர உதவியினை வழங்கியுள்ளன.இன்றைய தினம் அமெரிக்கா 350 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதுவொரு புறமிருக்க, களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் சோதமடைந்துள்ள பள்ளிக் கூடங்களை மறு சீரமைப்பதில் அமெரிக்கப் படையினரும், இராணுவ பொறியியலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here