இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி! எறிந்தாலும் உடையாத சோற்று உருண்டைகள்

இலங்கையில் பிளாஸ்டிக்கில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சதொச விற்பனை நிலையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் நிலவிய கடும் வறட்சி நிலையை அடுத்து, நிவாரணமாக வெளிநாடுகளால் வழங்கப்பட்ட அரசியில் இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

புறக்கோட்டை சதொசவில் விற்பனை செய்யப்பட்ட அரசி வகை ஒன்று தொடர்பில் தற்போது பேஸ்புக் பக்கங்களில் சில காணொளிகள் வெளியாகியுள்ளது.

பாஸ்மதி அரிசி கொள்வனவு செய்த பெண்ணொருவர் அதனை சமைத்த பின்னர் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சோறு சமைத்து 24 மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கெட்டு போகாமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த அரிசியில் சமைத்த சோற்று உருண்டைகளை தரையில் அடித்த போதும் சிதறாமல் பந்து போன்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான காணொளி ஒன்றையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை மாகும்புர சதொசவில் அரிசி கொள்வனவு செய்த நபர் ஒருவரும் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here