கதிர்காமம் முருகன் ஆலய தலைமை மதகுரு இன்று யாழ்.விஜயம்!

கதிர்காமம் முருகன் ஆலய தலைமை மதகுரு பஸ்நாயக்க நிலமே இன்றைய தினம்யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தில் உள்ளஇந்து மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல் நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுக்கும் சென்று வழிபாடுகளை நட த்தியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.வந்த பஸ்சநாயக்க நிலமே நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஆறுதிருமுகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.அத்துடன், நல்லூர் கந்தசுவாமி ஆலயம், தொண்டமனாறு செல்வச்சன்நிதி ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடுகள்மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை இந்து மத தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலிருந்து கதிர்காமத்திற்கு வரும் யாத்திரிகர்களின் வருகை மிகக் குறைவடைந்துள்ளமை ஏன் என பஸ்சநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

இதன்போது கதிர்காமம் இந்து தலம் என்பதற்கான அ டையாளங்கள் மாற்றப்பட்டு வருகின்றமை மற்றும் மொழி பிரச்சினை, இயல்பாக யாழ்ப்பாண மக்களுக்குள்ள அச்சம், கதிர்காமத்தில் யாத்திரிகர்களுக்கான தங்குமிடம் போன்றன இல்லாமையினாலேயே யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரிகர்கள் கதிர்காமம் வருவது குறைந்துள்ளது என இந்து மத தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பான தீர்வினை காணலாம் எனவும் யாழ்ப்பாணத்திலிருந்து அதிகளவு யாத்திரிகர்கள் கதிர்காமத்திற்கு வரும் வகையிலானஒழுங்குகளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மத தலைவர்களும், கதிர்காமம் முருகன் ஆலயமும் இணைந்து மேற்கொள்ளலாம் என்றான விடயங்கள் இதன்போது பேசப்பட்டுள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here