சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் மிகவும் இரகசியமான முறையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் வெளியேற்றிவிட்டு நான்கு மணித்தியாலங்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட ஐந்து முக்கிய அமைச்சர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் எவ்வாறு நீடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட மிக முக்கியமான சில உடன்படிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here