திருத்த வேலை காரணமாக மட்டக்களப்பில் நாளை மின்தடை

திருத்த வேலைகள் காரணமாக நாளை திங்கட்கிழமை  களுவாஞ்சிகுடி மின் பாவனையாளர் சேவை நிலையப் பராமரிப்புப் பகுதியில் மின்சாரத்தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை களுவாஞ்சிகுடி செட்டிபாளையம், தேற்றாத்தீவு, மற்றும் களுதாவளை, ஆகிய பிரதேசங்களில் திருத்த வேலை காரணமாக மின்சாரத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் மின் பாவனையாளர்கள் முன்னாயத்தமாக இருக்குமாறு  இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here