நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யும்..

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய மேல், தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணத்தில் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியும் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாலை 2 மணிக்கு மேலும் இவ்வாறு மழை பெய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேடமாக மழை பெய்யும் பிரதேசங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு வீசும் காற்றும் மணிக்கும் 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையாக வீசக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here