நானுஓயாவில் மண்சரிவினால் 2 வீடுகள் சேதம்!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாசோ தோட்ட மத்திய பிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அண்மையில் பெய்த கடும் மழையினால் வீட்டின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த மதில் மண்சரிவு காரணமாகச் சரிந்து விழுந்து இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த 12 பேர் உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க தொலைக்காட்சி பெட்டி மற்றும் தளபாடங்கள், உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என அனைத்தும் சேதமாகியுள்ளன.

இதேவேளை மண்சரிவு காரணமாக வீடுகளின் சுவர்கள் எல்லா பகுதிகளிலும் பாரிய வெடிப்புக்கள் காணப்படுவதுடன், சுவர்களும் சரிந்து விழக் கூடிய ஆபத்தான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை முன்னெடுத்து வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம் உணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here