நுவரெலியாவில் இயல்புநிலை பாதிப்பு

கடும் மழை மற்றும் காற்று கார­ண­மாக நுவ­ரெ­லியா பிர­தே­சத்தில் பல இடங்­களில் சிறிய மண்­ச­ரி­வுகள் ஏற்­பட்­டுள்­ள­துடன் மரங்­களும் முறிந்து வீழ்ந்­துள்­ளன. அத்­துடன் காற்று கார­ண­மாக ஒரு சில இடங்­களில் வீட்­டுக்­கூ­ரை­களும் சேத­ம­டைந்­துள்­ளன.

சில தினங்­க­ளாக தொடர்ந்து மழை பெய்து வரு­வதால் மரக்­கறி நிலங்­களில் மழைநீர் நிரம்­பி­யுள்­ளது. இதனால் மரக்­கறி உற்­பத்­தி­யி லும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

நுவ­ரெ­லியா கிர­கறி தெப்­பக்­கு­ளத் தின் வான் கத­வு­களும் ஒரு குறிப்­பிட்­ட­ளவு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நிலை கார­ண­மாக சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையும் தற்­பொ­ழுது குறைந்­துள்­ளது.

நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள மரக்­கறித் தோட்­டங்­களில் தொழில்­பு­ரியும் தொழி­லா­ளர்­க­ளுக்கும் தொழில் கிடைப்­ப­தில்லை. அதே­வேளை பெருந்­தோட்­டங்­களில் தொழில்­பு­ரியும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவு தேயிலை கொழுந்து பறிக்கமுடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here