பிரமந்தனாறில் மீன்பிடிக்க தந்தையுடன் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மரணம்

பிரமந்தனாறில்  மீன்பிடிக்க தந்தையுடன் சென்ற இளைஞன்  நீரில் மூழ்கி மரணம்

இன்று  மாலை  கிளிநொச்சி  பிரமந்தனாறுக்  குளத்தில்  மீன்பிடிக்க  படகில்  தந்தையுடன் சென்ற இளைஞன்  படகு புரண்டதில்  நீரில்  மூழ்கிய  நிலையில்  தந்தை  மற்றும்   கிராம மக்காளால்  மீட்க்கப்பட்டு  தர்மபுரம் வைத்திய சாலைக்கு  கொண்டு செல்லப்பட்டு  அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட  போதும்  மரணமடைந்த நிலையிலையே வைத்திய சாலையில் சேர்க்கப் பட்டுள்ளார்
நீரில் மூழ்கி இறந்த  இளைஞன்  மயில்வாகனபுரம்  புன்னைநிராவியைச்  சேர்ந்த பத்தொன்பது  வயதான  உதயகுமார் குமரன்  எனத் தெரிவிக்கப்படுகின்றது
இறந்தவரது சடலம் மரண விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here