பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் சாதகமான நடவடிக்கையினை

கேப்பாப்புலவு காணிகள் விடுவிப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இந்த அரசாங்கம் சாதகமான நடவடிக்கையினை விரைவாக எடுக்க வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக காணிகளை இராணுவத்தினர் தங்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்று இன்று 96வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை 11.00 மணியளவில் கேப்பாப்புலவு மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யூன் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் இந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி நிம்மதியாக வாழ்வதற்கு அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என்று கேப்பாப்புலவு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மே 18 ஆம் திகதி கேப்பாப்புலவு மக்களை சந்தித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேப்பாப்புலவு பொதுமக்களின் பூர்வீக காணிகள் 6 வாரத்தில் விடுவிக்கப்படும் என்று (18-05-2017) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here