மட்டக்களப்பில் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்கியாக வேண்டும் என்பதே எனது இலக்காகு எனப் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலவச குழாய் குடி நீர் வழங்கும் திட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், நீர் வழங்கல் வடிகால் சபையின் பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஸ் மாவட்ட முகாமையாளர் ஏ.ஜே.வசந்தராஜ் பொறுப்பதிகாரி எம். விக்கினேஸ்வரன் உட்பட ஏனைய பணியாளர்கள் மேற்படி விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

அதே வேளை உலக தரிசன அமைப்பினர் எமது வேண்டுக்கோளுக்கு அமைவாக, நிதியுதவியினை வழங்கியிருந்தனர். அந்த வரிசையில் இன்று முறக்கொட்டாஞ்சேனை இராகிருஸ்ண மிசன் வித்தியாலயம், கோரகல்லிமடு ரமணரிசி வித்தியாலயம், கிரான் பாடசாலை என்பவற்றிற்கு நீர் வழங்கப்பட்டு விட்டது.

எதிர்வரும் வாரத்தில் சந்திவெளி கிராமப் பாடசாலைக்கான குடிநீர் வழங்குவதற்கான செயற்பாடு நிறைவேற்றப்படவுள்ளது.

ஏற்கனவே களுவன்கேணியிலுள்ள இரு பாடசாலைகட்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

இதற்கான நிதியினை பாம் நிறுவன் வழங்கியது என்பதை நாம் மறக்கவில்லை ‘சுத்தமான குடி நீரே சுகமான வாழ்க்கையின் ஓர் அம்சமாகும்.’ என்ற வகையில் எமது மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற வழி செய்ய வேண்டும்.மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலக்காடு, கரடிப்பூவல் ஆகிய பின் தங்கிய கிராமங்களுக்குரிய குடிநீர் இணைப்பு கடந்த 2 ஆம் திகதி வழங்கப்பட்டு விட்டது.

அத்துடன், முள்ளாமுனைக் கிராமத்திற்கும் குடிநீர் இணைப்பு பூர்த்தியாகி விட்டது. இவற்றைப் விட, இன்னும் பல கிராமங்களுக்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. நீர் வழங்கலை விரைவாக செய்ய வேண்டியுள்ளது.

மேலும், இந்த விடயத்தில் தெய்வேந்திரன் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிக்கின்றேன். திகிலிவெட்டை வாகனேரி போன்ற கிராம மக்களும் தமது கிராமங்களுக்கு குடிநீர்வசதி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கையினை விடுத்துள்ளனர். இதற்கான அறிவுறுத்தல்களை உரிய உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here