முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் 115,020 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சி காரணமாக  35,670 குடும்பங்களை சேர்ந்த 115,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக, முல்லைத்தீவில்  காணப்படும் கடும் வரட்சி காரணமாக கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மணலாறு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

இதனடிப்படையில், அதிகம் பாதிக்கப்பட்டு குடிநீர் வசதியின்றி தவிக்கும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள  33 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொண்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here