லண்டனில் பயங்கரவாதிகள் அட்டகாசம் – 7 பேர் பலி – 30 பேர் படுகாயம்

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்றதாக அழைப்பு கிடைத்த 8 நிமிடயங்களில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று நபர்களும் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

லண்டனில் உள்ள London Bridge station பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளது.

அந்த வேனில் வந்த மர்மநபர்கள் மூன்று பேர் கையில் பிளேடுகள் மற்றும் கத்தியுடன் கீழே இறங்கி அங்கிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக லண்டன் நகரம் பெரும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here