வாழைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை முன்பாக வைத்து எழுபது கிராம் கேரள கஞ்சாவுடன் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைவஸ்து பாவனையை குறைக்கும் முகமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மூலம் விசேட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் போதை ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் ஐநூறு ரூபா பெறுமதியான கஞ்சாப் பைகள் இருபத்து மூன்றும், ஆயிரத்து ஐநூறு ரூபா பெறுமதியான கஞ்சா பைகள் ஆறும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here