அமைச்சரவை மாற்றத்தினால் ஏற்பட்ட குழப்பம்

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சுக்களுக்கான பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அரச உயர்மட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சில அமைச்சர்கள் தங்களுக்கு உரித்தல்லாத நிறுவனங்களையும் கோரிநிற்பதால், அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்போட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படாத நிலைமை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதன் பின்னர், ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here