இன்றைய ராசிபலன் 05.06.2017

மேஷம் : அன்றாட வாழ்வு முறை இனிதாக அமையும். தொழில், வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். மனைவியின் ஆலோசனை நன்மை தரும்.

ரிஷபம் : உங்களின் செயல்பாடு கண்டு மற்றவர்கள் புகழ்வர். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறு விலகும். விலை உயர்ந்த ஆடம்பரப் பொருள் வாங்குவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனில் ஆர்வம் ஏற்படும்.

மிதுனம் : அனைவரையும் அன்புடன் மதித்து பழகுவீர்கள். சமுதாயத்தில் கவுரவம் கூடும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். தெய்வ திருப்பணிக்கு பணம் தந்து உதவுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கடகம் : பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்களின் நற்குணம் புரிந்து பகைவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வருமானம் படிப்படியாக உயரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும்.

சிம்மம் : நண்பர்களின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் தடை நீங்கி லாபம் பெருகும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். பணியாளர்கள், நிர்வாகத்தின் குறிப்பறிந்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் ஆர்வமாக படிப்பர்.

கன்னி : எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிடுவீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சீர்திருத்தப் பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வர்.

துலாம்: மனதில் புத்துணர்ச்சி மேலோங்கும். அக்கம் பக்கத்தினருடன் நட்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கப் பணியில் ஈடுபடுவீர்கள். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

விருச்சிகம் : பொது விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

தனுசு : பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழில், வியாபார வகையில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். இல்லறத்துணையின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.

மகரம் : உறவினர்கள் அதிக எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் படிப்படியாக உயரும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

கும்பம் : உழைப்புக்குரிய பலன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பணியாளர்கள் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர். புத்திரர் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

மீனம் : நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் காண்பீர்கள். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். உடல்நலத்தில் கவனம் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here