எத்தனை மொட்டுக்கள் உதிருமோ? காமுகர்களை மீளாச்சிறையில் அடையுங்கள்!

மூதூர் – மல்லிகைத்தீவில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த கண்டனப்பேரணி காரைதீவில் இன்றைய தினம் (5) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இளந்தளிர்களை கிள்ளும் காம வெறியாளர்களை வெட்டி வீழ்த்துவோம், காமக்கயவர்களின் மோகப்பசிக்கு தமிழ்ச்சிறுமிகளா? தமிழ்ச்சிறுவர்களுக்கு பாதுகாப்பு யார்? அரசியல்வாதிகளே காமுகர்களைக் காப்பாற்றாதே மீளாச்சிறையில் அடையுங்கள், போன்ற சுலோகங்களடங்கிய பதாதைகளோடு பாரிய கண்டனப்பேரணியை முன்னெடுத்திருந்தனர்.குறித்த போராட்டத்தின் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துரைக்கையில்,

இதனை ஒருவகையான இன அழிப்பாகவே பார்க்கின்றோம். நல்லாட்சி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூதூர் சிறார்களுக்கு நடந்தது இனி இலங்கையில் எங்கும் நடைபெறக்கூடாது. இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை எதிர்காலத்தில் காமுகர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையவேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினமும் மூதூர் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து வடக்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here