பல பேரை ஏமாற்றிய பெண் கைது

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 24 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்த பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இணையத்தளம் மற்றும் பேஸ்புக் ஊடாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு ஊழல் விசாரணை அலுவலக அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 27 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபர்கள் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here