வீட்டு பாடம் செய்யவில்லை என மாணவனின் விரல்களை உடைத்த ஆசிரியை

வீட்டில் செய்து கொண்டு வருமாறு ஆசிரியர் கூறிய பாடத்தை செய்யாமல் வந்த மாணவனின் கை மற்றும் விரல்கள் உடையும் வரை தாக்கிய இளம் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதேசத்தின் பிரபல பாடசாலையின் இளம் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் கொழும்பு 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 5ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனுக்கு உதவி ஆசிரியரினால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரம்பு அல்லது வேறு பலகை ஒன்றினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here