இடம்பெயர்ந்தோருக்கான விசேட வாக்காளர் சட்டமூலம்

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விசேட சட்டமூலம் அரசியலமைப்புடன் ஒத்திசைவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (06) அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள், தங்களது பூர்வீகப் பிரதேசத்திலேயே வாக்களிப்பதற்கு வசதி செய்யும் வகையில், 2013 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க விசேட வாக்காளர் பதிவு சட்டத்தை, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ முன்வைத்திருந்தார்.

இந்த சட்டமூலம் அரசமைப்புடன் ஒத்திசைகின்றதா என்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றம் கோரியிருந்தது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விசேட சட்டமூலமானது அரசமைப்புடன் ஒத்திசைகின்றது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here