இரத்தினதீபம் தேசிய விருது விழா யாழ்ப்பாணத்தில்…

மலையக கலை கலாச்சார சங்கம் தொடர்ந்தும் 22ஆவது தடவையாக நடத்தும் இரத்தினதீபம் தேசிய விருது விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருப்பதாக விழாக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 10-06-2017 திகதி அன்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கைச்சேர்ந்த பல்துறை சாதனையாளர்களுக்கு “தேசாபிமானி” விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மலையக கலை கலாச்சார சங்கத்தின் தலைவர் ராஜா ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத் தூதுவர் நடராஜன் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிவைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here