இரத்தினபுரியில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

இரத்தினபுரி மாவட்டத்தின், பெல்மதுளை பிரதேசத்தில் நேற்று ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெல்மதுளை ரில்ஹேன பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ரில்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான வீரப்புலி ஆராச்சிலாகே தோன் நிரோஷா குமாரி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெல்மதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here