இரு பிரதான கட்சிகள் இணைந்து செயற்பட்டால் பல பிரச்சினைகளை தீர்க்கலாம்

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்வில் நேற்று(05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்காத காரணத்தினால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here