இலங்கையின் வரலாற்றை சிதைக்கும் வகையில் வடக்கில் புதிய நூல்

இலங்கையின் வரலாற்றை சிதைக்கும் வகையில் வடக்கில் நூல் ஒன்று எழுதப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றை மாற்றும் வகையில் புதிய நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அடையாளம் என்னும் நிறுவனத்தினால் இவ்வாறு சில நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிப் போராட்டம், இறுதிக் கட்ட போரில் உயிர் பிழைத்தவர்களினால் கூறப்படும் உண்மைகள் மற்றும் போரின் போது இடம்பெற்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகள் என்ற போன்ற விடயங்கள் நூல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வடக்கின் பாடசாலைகளுக்கு இடையில் விநியோகம் செய்ய இந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளதாக குறித்த சிங்களப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அடையாளம் என்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிதி உதவி கிடைக்கப் பெறுவதாக மேலும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் கதை என்னும் பெயரில் இந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here